close
Choose your channels

சூர்யா படத்தில் ப்ரியாவாரியர் நடிப்பது உண்மையா? கே.வி.ஆனந்த் விளக்கம்

Wednesday, March 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்து வரும் 'NGK' படத்தை அடுத்து இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சூர்யா-கே.வி.ஆனந்த் படத்தில் சமீபத்தில் இணையதளங்களில் ஒரே ஒரு கண்ணசைவின் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ப்ரியாவாரியர் நாயகியாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தன்

இந்த செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குனர் கே.வி.ஆனந்த், இந்த படத்தில் நடிக்க ப்ரியாவாரியரிடம் தாங்கள் அணுகவில்லை என்றும், இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் கூறியதோடு, இந்த படத்திற்காக டாப் நாயகிகளில் ஒருவரை தேர்வு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியாவாரியர் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கேவிக் யுரே ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்டிரைக் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.