பிரபல டிவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய லட்சுமி ராமகிருஷ்ணன்

  • IndiaGlitz, [Monday,October 26 2015]

பிரபல குணசித்திர நடிகை மற்றும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "என்னுடைய வழக்கறிஞர் விஜய் டிவி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிரிச்சா போச்சு மற்றும் 'அது இது எது' ஆகிய நிகழ்ச்சிகளில் நான் பேசிய 'என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா' என்ற வசனத்தை தொடர்ந்து கேலி செய்து வருவதால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த வசனத்தை விஜய் டிவி ஒருசில நிகழ்ச்சிகளில் பயன்படுத்தியபோது நான் அதை ஸ்போர்ட்டிவ் ஆக எடுத்து கொண்டேன். அதைபோல ஒருசில படங்களிலும், 'ரஜினி முருகன்' படத்திலும் இதே வசனம் பாடலாக மாறியபோதும் நான் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வசனம் காலப்போக்கில் மறக்கடிக்கப்படும் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.

ஆனால் தற்போது மீண்டும் இதே வசனத்தை திரும்ப திரும்ப விஜய் டிவியின் பயன்படுத்தி வருவதால், இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத நான் சட்ட நடவட்டிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன். இந்த வழக்கின் முடிவு எப்படி இருக்கும் என்பது குறித்து எனக்கு கவலை இல்லை. ஆனால் இம்முறை நான் எனது இமேஜை காப்பாற்றிக்கொள்ளும் முடிவில் இருக்கின்றேன்' என்று அந்த அறிக்கையில் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

More News

கமலிடம் மன்னிப்பு கேட்டது ஏன்? பிரபல இயக்குனர் விளக்கம்

சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' திரைப்படம் சூப்பர் ஹிட் பெற்றது....

புல்லரிக்க வைக்கும் விஜய்யின் பரந்த மனம். ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு

இளையதளபதி விஜய்யின் பரந்த மனம் குறித்து பல சம்பவங்கள் வெளிவந்துள்ள நிலையில் சமீபத்தில் விஜய்யை சந்திக்க தனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது...

'பாகுபலி' - 'காஞ்சனா 2' இணையும் 'வீரபலி'

இந்திய அளவில் சூப்பர் ஹிட் ஆன 'காஞ்சனா 2' இயக்குனர் ராகவா லாரன்ஸ் மற்றும் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆன 'பாகுபலி'....

'காக்கி'க்காக பேச்சுவார்த்தை நடத்தும் 'விஜய் 59' குழுவினர்

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' திரைப்படத்திற்கு தலைப்பு கிட்டத்தட்ட தயாராகிவிட்டது.....

தீபாவளி தினத்தில் அஜீத் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் இந்த படம் இன்று சென்சார் அதிகாரிகளால் சென்சார் செய்யப்படும்...