close
Choose your channels

'பாகுபலி' - 'காஞ்சனா 2' இணையும் 'வீரபலி'

Monday, October 26, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய அளவில் சூப்பர் ஹிட் ஆன 'காஞ்சனா 2' இயக்குனர் ராகவா லாரன்ஸ் மற்றும் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆன 'பாகுபலி' நாயகன் பிரபாஸ் ஆகிய இருவரும் இணைந்த 'ரிபல்' என்னும் தெலுங்கு படம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாகாங்களில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது.

பிரபாஸூக்கு ஜோடியா தமன்னா மற்றும் தீக்ஷா சேத், பிரமானந்தம், கோவை சரளா உள்பட பலர் நடித்திருந்த இந்த தற்போது தமிழில் டப்பிங் ஆகி வருகிறது. இந்த படத்திற்கு 'வீரபலி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழ் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கு ராகவா லாரன்ஸ் அவர்களே இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து சூப்பர் ஹிட் டியூனை இந்த படத்திற்காக ராகவா லாரன்ஸ் கம்போஸ் செய்துள்ளார். 'வீரபலி' படத்தின் இசை வெளியீட்டு தேதி மற்றும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.