close
Choose your channels

லெஜண்ட் சரவணன் அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது? அவரே வெளியிட்ட அறிவிப்பு..!

Friday, February 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த ’லெஜெண்ட்’ என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அவருடைய அடுத்த பட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பதை அவரே தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

சென்னையின் மிகப்பெரிய தொழிலதிபர்களின் ஒருவரான லெஜண்ட் சரவணன் ’லெஜெண்ட்’ என்ற திரைப்படத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடித்த நிலையில் அந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து அவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கான லுக் டெஸ்ட் நேற்று நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் தனது சமூக வலைதளத்தில் உறவினர் திருமண விழாவில் சொந்த பந்தங்களுடன் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அதே பதிவில் அவர் ’ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு ஆரம்பம்’ என்றும் குறிப்பிட்டுள்ளதை அடுத்து லெஜண்ட் சரவணன் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் துரை செந்தில்குமார் தற்போது ’கருடன்’ என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டு அதன் தொழில்நுட்ப பணிகளில் பிசியாக இருக்கும் நிலையில் அந்த பணியை முடித்தவுடன் அவர் லெஜண்ட் சரவணன் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment