close
Choose your channels

'மாஸ்டர்' ஆண்ட்ரியா போல் மாறிய 'லியோ' நடிகை.. வைரல் வீடியோ..!

Monday, March 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்த நடிகை ஆண்ட்ரியா போல் ’லியோ’ படத்தில் நடித்து வரும் நடிகை உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இணைந்தவர் நடிகை அபிராமி வெங்கடாசலம் என்பதும், அவர் காஷ்மீரில் உள்ள படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை அபிராமி வெங்கடாசலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வில் அம்பு விடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது தனது பொழுதுபோக்குகளில் ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வரும் நிலையில் இந்த வீடியோவின் கமெண்ட்ஸில் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் ஆண்ட்ரியா அம்பு விடுவது போல் 'லியோ’ படத்தில் அபிராமியை லோகேஷ் கனகராஜ் அம்பு விட வைக்க போறாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர். இந்த வீடியோவுக்கு இதே போன்று ஏராளமான சுவராசியமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

லலித தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.