close
Choose your channels

'லியோ' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இந்த தேதியிலா? ரசிகர்கள் குஷி..!

Friday, June 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது. விஜய் மற்றும் அர்ஜுன் நடிக்கும் அதிரடி ஆக்சன் காட்சிகளை படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ கமலஹாசனின் பிறந்த நாளில் வெளியான நிலையில் அதேபோல் விஜய் பிறந்த நாளிலும் அவரது ரசிகர்களுக்கு விருந்து அளிக்க இந்த வீடியோ வெளியாகும் என்று கூறப்படுகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ‘லியோ’ படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos