'லியோ' சோலோ ரிலீஸ் இல்லை.. போட்டிக்கு வருகிறது பாரதிராஜா படம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடித்த 'லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வியாழக்கிழமை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படம் வெளியாகும் தினத்தில் வேறு எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை என்று தான் கூறப்பட்டது. ஏனெனில் 'லியோ’ படத்தை திரையிடவே திரையரங்க உரிமையாளர்கள் விரும்புவார்கள் என்பதால் சின்ன படம், பெரிய படம் என எந்த படமும் ரிலீஸ் ஆவதாக அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி 'லியோ’ படம் வெளியான அடுத்த நாள் அதாவது அக்டோபர் 20ஆம் தேதி பாரதிராஜா நடிப்பில் அவரது மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’மார்கழி திங்கள்’ என்ற திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் அக்டோபர் 6ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
'லியோ’ படத்தையும் மீறி ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் இந்த படம் விஜய் படத்தையும் மீறி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments