close
Choose your channels

லிங்குசாமியின் அடுத்த பட டைட்டில்-பர்ஸ்ட்லுக் ரிலீஸ்!

Monday, January 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லிங்குசாமி, ‘ஆனந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் ’ரன்’ ’சண்டக்கோழி’ ’பையா’ ’அஞ்சான்’ உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கினார்.

இந்த நிலையில் தற்போது அவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தனேனி நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’தி வேரியர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.