close
Choose your channels

நெருங்கிய நண்பரின் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லோகேஷ் கனகராஜ்: என்ன படம்?

Tuesday, March 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் பிசியான இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ் என்பதும் ’விக்ரம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் அவர் பல முன்னணி நடிகர்களை இயக்க காத்திருக்கிறார் என்பது தெரிந்ததே. பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கோலிவுட் பிரபலங்கள் அவருக்கு வாய்ப்பு கொடுக்க தயாராக உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இந்த படம் வெற்றி பெற்றால் இந்திய அளவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஆர்ஜே பாலாஜி நடித்துவரும் ’சிங்கப்பூர் சலூன்’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்தில் அவர் டிவி ரியாலிட்டி ஷோவின் ஜட்ஜ் ஆக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக ஆர்.ஜே பாலாஜி மற்றும் லோகேஷ் கனகராஜ் நண்பர்களாக இருந்து வரும் நிலையில் நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது

ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், லால், தலைவாசல் விஜய் உட்பட பலர் நடிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படத்தை கோகுல் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே ‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’,‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.