close
Choose your channels

மாதவனின் 'ராக்கெட்டரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Monday, February 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான மாதவன் நடித்து இயக்கிய ‘ராக்கெட்டரி’ திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதிகள் ஒரு சில அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் அந்த தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்ததையடுத்தும், திரையரங்குகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை அடுத்தும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 1 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாதவன் தனது சமூக வலைத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மாதவன், சிம்ரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி உள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.