close
Choose your channels

பாபிசிம்ஹாவின் அடுத்த படத்தில் ஷங்கர்-மணிரத்னம் நாயகி

Thursday, June 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற நடிகர் பாபிசிம்ஹா தற்போது விக்ரமின் 'சாமி 2', படத்தில் வில்லனாகவும், 'அக்னிதேவ்' மற்றும் 'வல்லவனுக்கு வல்லவன்' ஆகிய படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார்

இந்த நிலையில் அவர் நடித்து வரும் 'அக்னிதேவ்' படத்தில் நடிகை மதுபாலா இணைந்துள்ளார். இவர் மணிரத்னம் இயக்கிய 'ரோஜா', ஷங்கர் இயக்கிய' ஜெண்டில்மேன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த 'வாயை மூடி பேசவும்' படத்தை அடுத்து மதுபாலா நடிக்கும் தமிழ்ப்படம் இதுதான். இந்த படத்தில் மதுபாலா முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

ஜேபிஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி வரும் 'அக்னிதேவ்' திரைப்படம், பிரபல க்ரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் ஒரு நாவலை தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் பாபிசிம்ஹாவுடன் முக்கிய வேடத்தில் சதீஷ் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.