close
Choose your channels

படப்பிடிப்புக்கு செல்லுமுன் மணிரத்னத்துடன் செல்பி எடுத்த நடிகை!

Tuesday, June 25, 2019 • தமிழ் Comments

இயக்குனர் மணிரத்னம் ஒருபக்கம் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணியில் பிசியாக இருந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் 'வானம் கொட்டட்டும்' என்ற படத்தை தயாரித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை 'படைவீரன்' இயக்குனர் தனா இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே

விக்ரம்பிரபு, மடோனா செபாஸ்டியன் ஜோடியாக நடிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் விக்ரம்பிரபுவின் தங்கையாக நடிக்கவுள்ளார். மேலும் 20 வருடங்களுக்கு பின் சரத்குமார்-ராதிகா இந்த படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் நேற்று மரியாதை நிமித்தமாக தயாரிப்பாளர் மணிரத்னத்தை சந்தித்த நடிகை மடோனா அவருடன் செல்பி எடுத்து கொண்டு அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மணிரத்னம் அவர்களை நான் சந்தித்தபோது எனக்கு நேர்ந்த மகிழ்ச்சியை இந்த புகைப்படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று மடோனா பதிவு செய்துள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz