close
Choose your channels

ஜாதித்தீவாக மாறும் சென்னை ஐஐடி....! வேலையை ரிசைன் செய்வதாக பேராசிரியர் கடிதம்...!

Friday, July 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை ஐ.ஐ.டி சாதிப்பாகுபாடு நிலவுவதால், பணியில் இருந்து விலகுவதாக உதவிப் பேராசிரியர் விபின் கடிதம் அனுப்பியுள்ளார்.

நம் நாட்டில் மாபெரும் உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஐ.ஐ.டி கருதப்படுகிறது. இங்கு பணிபுரிய வேண்டும் என்றும், படிக்கவேண்டும் என்பதும் பலரின் கனவாகவே இருந்து வருகிறது. இதனால் பல போராட்டங்களை கடந்தும், இங்கு கல்வி பயில மாணவர்கள் வந்து சேர்கிறார்கள். ஆனால் இங்கோ வர்க்கம், மதம் என்பதன் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பார்ப்பதும், ஒடுக்குமுறை நடப்பதும், ஜாதி ரீதியாக இழிவு செய்யப்படுவதும் பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும், இங்கு பணிபுரியவும், கல்வி கற்கவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

உலகளவில் பிரபலமான கணிதமேதை பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்கள், உயர்ந்த சாதியினராக இல்லாததால், அங்கு பணிபுரிந்த அனைத்து வருடங்களும் அவருக்கு கொடுமை நடந்துள்ளது. இந்த அராஜகங்கள் எல்லாம் 90- களில் தான் நடந்தேறியுள்ளது. இதற்காக வசந்தா அவர்கள் கடுமையாக சட்டரீதியாக போராடி, தனக்கான நீதியைப்பெற்றார். இவரின் போராட்ட திறமையை பாராட்டி, கடந்த 2006-ல் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, "வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது" வழங்கி கவுரவித்தார்.

சென்ற 2 வருடங்களுக்கு முன்பு கேரள மாணவி பாத்திமா லத்தீப் இறந்த செய்தி, இந்தியாவையே உலுக்கிப்போட்டது. ஜாதி, மத காரணங்களால் இங்கு மாணவர்கள் ஒடுக்கப்படுவதும், அதனால் நடக்கும் மாணவர்களின் தற்கொலை மரணங்களும் பெரும்பாலும் வெளியில் தெரிவதேயில்லை.

இதன் வரிசையில் தற்போது உதவிப் பேராசிரியரான விபின் சேர்ந்துள்ளார். ஜாதி ரீதியான பாகுபாடுகளை, அதிகளவில் சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் வெளிப்படுத்திக்கொண்டே இருப்பதால், அவரால் அங்கு பணிபுரியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் பணியில் இருந்து விலகுவதாக இ மெயில் மூலம், ஐ.ஐ.டி. நிர்வாகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் சமூகவலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.