close
Choose your channels

சூர்யா-ஜோதிகாவுக்கு ரூட் க்ளியர்

Monday, June 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடித்து வந்த 'மகளிர் மட்டும்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முற்றிலும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது.

'மகளிர் மட்டும்' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் தயாரிப்பாளர் சூர்யாவுக்கு இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் ரூட் க்ளியர் ஆகியுள்ளது. வெகுவிரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இந்த தகவலை சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்

'குற்றம் கடிதல்' இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜோதிகா, நாசர், லிவிங்ஸ்டன், சரண்யா, பானுப்ரியா, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு மணிகண்டன் ஒளிப்பதிவும், பிரேம் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.