close
Choose your channels

பாலிவுட்டில் ஆக்சன் நாயகி ஆகும் 'மாஸ்டர்' நாயகி!

Wednesday, June 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த மாளவிகா மோகனன், அதன் பின்னர் ஜாக்பாட் அடித்தது போல் விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் நாயகி ஆனார். இந்த படம் வெளியாகும் முன்னரே அவருக்கு பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதும், வரும் வாய்ப்புகளை சரியாக தேர்வு செய்து மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் தற்போது பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மறைந்த பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி நடித்த என்ற ‘மாம்’ படத்தை இயக்கிய ரவி உத்யவார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் தான் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தில் அவர் ஆக்ஷன் நாயகியாக நடிப்பதாகவும் இந்த படத்தில் அவருக்கு ஸ்டண்ட் காட்சிகள் இருப்பதாகவும் இதற்காக மாளவிகா மோகனன், மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. சித்தாந்த் சதுர்வேதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யுடன் மாளவிகா மோகனன் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் தமிழ் திரை உலகில் மிக அதிக எதிர்பார்ப்புக்குரிய ஒரு படம் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.