close
Choose your channels

கடலில் ஒய்யாரமாக மிதக்கும் மாளவிகா மோகனன்: வைரல் புகைப்படம்!

Friday, January 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மாலத்தீவில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பதிவு செய்த முன்நிலையில் அந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானது.

இந்தநிலையில் மாலத்தீவு கடலில் நீச்சல் உடையுடன் மிதக்கும் புகைப்படத்தை மாளவிகா மோகனன் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன. மேலும் இந்த புகைப்படத்திற்கு ’மிதவை’ என்ற கேப்ஷனை அவர் பதிவு செய்துள்ளதையும் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

’மாஸ்டர்’ திரைப்படத்திற்குப் பின்னர் தற்போது தனுஷூடன் ’மாறன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள மாளவிகா மோகனன், ஒரு ஹிந்தி ஆக்சன் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.