close
Choose your channels

தமிழ் திரைப்பட உலகில் ஒரு புதிய மலேசிய நட்சத்திரம்.

Saturday, February 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக்கி வரும் ’மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படத்தில் சமீபத்தில் மலேசியா நடிகர் டி.எஸ்.ஜி நடிக்க இருக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது டி.எஸ்.ஜி இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, சுனில் ஆகியோர் வில்லனாக நடிக்கும் நிலையில் டி.எஸ்.ஜியும் ஒரு வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல மலேசியா திரைப்படங்களில் நடித்த அனுபவமுள்ள டி.எஸ்.ஜி தற்போது தமிழ் திரை உலகிலும் வில்லனாக களமிறங்கி உள்ளார். இந்த படம் வெளி வந்தால்டி.எஸ்.ஜி-க்கு இன்னும் அதிக தமிழ் படங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் மலேசிய நடிகர் டி.எஸ்.ஜி தமிழகம் வந்து செய்தியாளர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.