close
Choose your channels

பிரபல நடிகர் மகளின் அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்டிய வாலிபர் கைது!

Friday, July 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் ஒருவர் மகளின் அந்தரங்க புகைப்படங்களை காட்டி சமூக வலைதளங்களில் பதிவு செய்வதாக மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர் ஒருவரின் மகள் மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கின்றார். அவரது அந்தரங்க புகைப்படங்களை எடுத்த வாலிபர் ஒருவர் அவருக்கு மெசேஜ் அனுப்பி தனக்கு தேவையான பணத்தை கொடுக்காவிட்டால் அந்த அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்த அந்த நடிகரின் மகள் தன்னால் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மட்டுமே கொடுக்க முடியும் என்றும் அதற்கு மேல் தன்னிடம் பணம் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபர் அதிகமாக பணம் கேட்டதை அடுத்து அந்த கல்லூரி மாணவி தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

இது குறித்து பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் நடிகரின் மகளை மிரட்டிய அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் நடிகரின் மகள் படிக்கும் கல்லூரியில் தான் குற்றவாளியின் சகோதரியும் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவருக்கும் இந்த குற்றத்தில் பங்கு இருக்குமா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.