close
Choose your channels

'மேன் வெர்சஸ் வைல்ட்': வைரலாகும் ரஜினிகாந்த் புகைப்படங்கள்

Wednesday, January 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் டிஸ்கவரி சேனல் தயாரித்த ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படத்தில் நேற்று நடித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்துக்கு காயம் ஏற்பட்டதாகவும் இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதும் வதந்தி கிளம்பியது. ஆனால் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்து நேற்று சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தபோது, ‘எனக்கு சிறு முள் மட்டுமே குத்தியது என்றும் வேறு காயங்கள் எதுவும் இல்லை என்றும் ஆவணப் படத்தின் படப்பிடிப்பில் நல்லபடியாக முடிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே இந்த ஆவணப்படம் விரைவில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆவணப்படத்தின் குழுவினருடன் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இயக்குனர் பியர் கிரில்ஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் உள்ளனர்.

அதே போல் இந்த ஆவணப்படத்திற்கு பாதுகாப்புக்காக வந்திருந்த வனத்துறை அதிகாரிகளும் ரஜினிகாந்துடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது போன்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ’தலைவர் 168’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் விரைவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.