close
Choose your channels

பாடகி அவதாரம் எடுத்த பிரபல நடிகை… ரசிகர்களை மிரள வைக்கும் வைரல் வீடியோ!

Tuesday, May 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாள மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை மஞ்சுவாரியர் தமிழில் முதல் முறையாக ஒரு படத்திற்கு பின்னணி பாடல் பாடியுள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது 40 வயதைக் கடந்த பிறகும் நடிகை மஞ்சு வாரியர் முன்னணி நடிகையாகவே வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழில் இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “அசுரன்“ திரைப்படத்தில் பச்சையம்மாள் எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை மிரள வைத்தார். இதைத் தொடர்ந்து பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் சமீபத்தில் உருவாக்கி இருக்கும் “சென்டிமீட்டர்“ எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் இவர் நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற “கிம் கிம் கிம்“ எனும் பாடலுக்குத்தான் நடிகை மஞ்சுவாரியர் பின்னணி பாடியுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குநர் அவதாரம் எடுத்து உருவாக்கியிருக்கும் சென்டிமீட்டர் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் எனும் இரு மொழிகளில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. வரும் மே 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தில் மஞ்சுவாரியரைத் தவிர நடிகர் யோகி பாபு, காளிதாஸ் ஜெயராம், ஷைலி கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை மஞ்சுவாரியர் தமிழில் முதல் முதலாகப் பின்னணி பாடியிருக்கும் “கிம் கிம் கிம்“ பாடலைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.