close
Choose your channels

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் நாயகி.. இன்னொரு முக்கிய அறிவிப்பும் வெளியீடு..!

Tuesday, March 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாயகனாக துருவ் விக்ரம் நடிக்கப் போகிறார் என்ற செய்தி வெளியான நிலையில் இந்த படத்தின் நாயகி மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

‘பரியேறும் பெருமாள்’ ’கர்ணன்’ ’மாமன்னன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கும் ஒரு ஸ்போர்ட்ஸ் படத்தை இயக்கப் போகிறார் என்பதும் இந்த படத்திற்காக துருவ் விக்ரம் கடந்த சில மாதங்களாக கபடி விளையாட்டு பயிற்சி பெற்றார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்க இருப்பதாகவும் அனைவரும் இணைந்த புகைப்படத்தை நீலம் ஸ்டுடியோ நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, இந்த தகவலை உறுதி செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இம்மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.