close
Choose your channels

மாஸ் மஹாராஜா ரவி தேஜாவின் “டைகர் நாகேஸ்வர ராவ்”  ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்..!

Friday, May 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாஸ் மஹாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இணைந்து வழங்கும் பான் இந்திய பிரமாண்ட படைப்பு “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

தி காஷ்மீர் ஃபைல்ஸ், கார்த்திகேயா 2, என இந்திய அளவில் பிளாக்பஸ்டர்களை வழங்கிய அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தற்போது தென்னிந்தியா மற்றும் வட இந்தியா முழுமைக்குமான ஒரு பான் இந்திய திரைப்படமான “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்துடன் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது.

இந்தியா முழுதும் ரசிகர்களை கொண்டிருக்கும் மாஸ் மகாராஜா ரவிதேஜா இப்படத்தில் நடிக்கிறார். இயக்குநர் வம்சி இயக்க, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அபிஷேக் அகர்வால் இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார்.

இப்படத்தின் துவக்கமே அனைவரது புருவத்தையும் உயர்த்தும் வகையில் மிக பிரமாண்டமாக துவங்கியுள்ளது. படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சுவாரஸ்யமான ஒரு வீடியோவை தற்போது தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

ராஜமுந்திரியில் உள்ள சின்னமான ஹேவ்லாக் பாலம் (கோதாவரி) எனும் இடத்தில் பிரம்மாண்டமாக பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவிற்கென ஒரு ரயிலை வாடகைக்கு எடுத்துள்ளனர் தயாரிப்பாளர்கள். புதுமையான இந்த நிகழ்வு அனைவர் மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடர்ந்த தாடியுடன் முரட்டுத்தனமான கெட்-அப்பில் காணும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், ரவி தேஜா கம்பிகளுக்குப் பின்னால் உறுமும் புலி போல மிரட்டுகிறார். ஒரு போஸ்டர் தான் என்றாலும் அவரது கண்கள் பார்க்கும்போது நம்மிடம் பயத்தை விதைக்கிறது. டைகர் நாகேஸ்வர ராவின் உலகை அறிமுகப்படுத்தும் வகையில் இந்த ஃபர்ஸ்ட் லுக் கான்செப்ட் போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் வீடியோ ஐந்து வெவ்வேறு மொழிகளில் ஐந்து வெவ்வேறு சூப்பர்ஸ்டார்களின் குரலில், அசத்தலால வெளியாகியுள்ளது. தெலுங்கு பதிப்பிற்கு வெங்கடேஷ் குரல் கொடுக்க, ஜான் ஆபிரகாம், சிவ ராஜ்குமார், கார்த்தி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் முறையே இந்தி, கன்னடம், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் டைகர் நாகேஸ்வர ராவின் உலகத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

வீடியோவின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி, கதை உண்மையான சம்பவங்களில் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. “1970 ஆம் வருடங்களில் வங்காள விரிகுடா கடலோரப் பகுதியில் உள்ள ஒரு குட்டிக் கிராமம்... உலகையே பயமுறுத்தும் இருள் கூட அங்குள்ள மக்களைப் பார்த்து அஞ்சுகிறது... பெரும் சத்தம் எழுப்பும் ரயில் அந்தப் பகுதியின் எல்லையை அடையும் போது நடுங்குகிறது... அந்த ஊரின் அடையாளத்தை பார்த்தாலே கால் நடுங்குகிறது... தென்னிந்தியாவின் குற்றத் தலைநகரம் ஸ்டூவர்ட்புரம்... அந்தப் பகுதிக்கு இன்னொரு பெயர்... டைகர் சோன்... டைகர் நாகேஸ்வர ராவின் கோட்டை...” என்று குரல் விளக்குகிறது.

வீடியோவில் வரும் வசனத்தில்- “புலி மானை வேட்டையாடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம்? புலி புலியை வேட்டையாடுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?" என ரவி தேஜா கூறியது அந்த கதாபாத்திரத்தின் தன்மையை விவரிக்கிறது. சூப்பர் ஸ்டார்களின் குரல்வழி சித்தரிப்புகள் இந்த வீடியோவை இன்னும் சுவாரஸ்யமாக்குகின்றன.

இயக்குநர் வம்சி ஒரு அதி அற்புதமான திரைக்கதையுடன் மிகப் புதுமையான வகையில் வழங்குகிறார். இந்திய அளவில் பிரபலமான சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து மிக நவீனமான வகையில் ஒரு புதிய அனுபவத்தை வழங்கவுள்ளார்கள்.

அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் பிரமாண்டம், ஒளிப்பதிவாளர் R மதி ISC ஒளிப்பதிவில், இயக்குநர் வக்சியின் காட்சிகள், GV பிரகாஷ் குமார் இசையயில் நம்மை வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்கிறது. ரவி தேஜாவின் உடல் மொழி, வசனம், கெட்அப் ஆகியவை இதுவரை இல்லாத வகையில் மாறுபட்டதாக இருக்கிறது. பர்ஸ்ட் லுக் மற்றும் கான்செப்ட் வீடியோ நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணிபுரிகிறார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுத, மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

டைகர் நாகேஸ்வர ராவின் பாக்ஸ் ஆபிஸ் வேட்டை அக்டோபர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும், பிரமாண்டமாக தசரா பண்டிகையுடன் துவங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.