close
Choose your channels

'மாஸ்டர்' வெளியீட்டு தேதியில் மாற்றமா? படக்குழுவினர் தகவல் 

Saturday, February 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் பேட்ச்வொர்க் படப்பிடிப்புகள் மட்டும் நடைபெற்று வருவதாகவும் அதுவும் இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் என்றும் தெரிகிறது

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தில் சிஜி பணிகள் உட்பட அதிக அளவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இருப்பதால் திட்டமிட்டபடி ஏப்ரல் 9ஆம் தேதி இந்தப் படம் வெளிவருமா? என்று ஒரு சிலர் யூடியூப் மற்றும் இணையதளங்களில் சந்தேகத்தை கிளப்பி விட்டனர். மேலும் தயாரிப்பு தரப்பு ஒத்துழைப்பும் சரியாக இல்லை என்றும் அவர்கள் வதந்திகளை பரப்பி வருகின்றனர்

இதனை அடுத்து ஏற்கனவே ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ஒரு சில இடங்களில் வியாபாரமும் முடிக்கப்பட்டுள்ள நிலையில் விநியோகஸ்தர் இந்த வதந்தியால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இது குறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்தபோது ’மாஸ்டர்’ படத்தின் 95 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் டப்பிங் பணிகள் உள்ளிட்ட போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியீட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் திட்டமிட்டபடி குறிப்பிட்ட தேதியில் வெளியாகும் என்றும் கூறியுள்ளனர்

மேலும் சென்சார் பணிகள் முடிந்த பிறகு அதிகாரபூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ஏப்ரல் 9ஆம் தேதி ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகும் என்பது உறுதியாகி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.