மகன் இயக்குனராக முழு சொத்தையும் விற்றுக் கொடுத்த பெற்றோர்.

  • IndiaGlitz, [Tuesday,July 02 2019]

முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் இயக்குனர் சுரேந்திரன் இயக்கியிருக்கும் காதல் படம் 'மாயபிம்பம்'. இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி இம்மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியாகவுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவருமே புதுமுகம் என்பதால் அப்படத்தை தயாரிக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை. அதனால் சோர்வடைந்த தங்கள் மகனைப் பார்த்த டைரக்டர் சுரேந்தரின் பெற்றோர், தங்களது ஓய்வூதிய தொகை, அம்மாவின் நகைகள் மற்றும் அவர்களின் வாழ்நாள் சேமிப்புவரை அனைத்தையும் இப்படம் எடுக்கக் விற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு கதை தெரியாது, எப்படியும் தன் மகன் தவறாகப் போகமாட்டான் என்ற நம்பிக்கையில் உதவியிருக்கிறார்கள்.

படம் முழுவதும் எடுத்து முடித்த பிறகு திரையில் பார்த்த அவரது பெற்றோர்களும், குடும்பத்தாரும் மற்றும் நண்பர்களும் மகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்கள். பெரிய டைரக்டர்களான பாலாஜிசக்திவேல், சுசீந்திரன், பாண்டிராஜ் , வெற்றிமாறன் போன்றவர்கள் பார்த்து பிரமித்துள்ளார்கள். காதலின் வலியை யதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள் என்று பாராட்டியுள்ளார்கள். படத்தை பார்த்த டைரக்டர் சுசீந்திரனின் தம்பி தாய்சரவணண் இப்படத்தை வெளியிட உதவி செய்துள்ளார்.
 

More News

ஜோதிகா பட பாடலை ஜோராக பாடிய சாயிஷா

சூர்யா, ஜோதிகா நடித்த வெற்றிப்படங்களில் ஒன்றான 'காக்க காக்க' படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட் என்றாலும் ஜோதிகாவுக்கு மிகவும் பிடித்த பாடல் 'ஒன்றா இரண்டா'

தோழியுடன் இணைந்து பேபிக்காக பாதயாத்திரை சென்ற சமந்தா!

ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்த பின்னர் அந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக திருப்பதி சென்று வழிபடுவது ரஜினி, அஜித் உள்பட பல நடிகர்  நடிகைகளின் வழக்கமாக இருந்து வருகிறது.

கிரண்பேடியின் டுவீட்டுக்கு பாராட்டும் கண்டனமும் தெரிவித்த பிரபல நடிகை!

புதுவை கவர்னராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்து அம்மாநில முதல்வருக்கு குடைச்சல் கொடுத்து வரும் கிரண்பேடி தற்போது மாநில எல்லை தாண்டி தமிழக அரசியல், தமிழக மக்கள் குறித்தும்

விஜய்யின் 'பிகில்' படத்தில் ஷாருக்கான் குத்தாட்டம்?

தளபதி விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.

'பிகில்' படத்தின் அடுத்த அப்டேட்டை அளித்த அர்ச்சனா கல்பாதி!

விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக், செகண்ட்லுக் போஸ்டர் குறித்த அப்டேட்டை விஜய்யின் பிறந்த நாள் பரிசாக அளித்த இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி