close
Choose your channels

'பிகில்' படத்தின் அடுத்த அப்டேட்டை அளித்த அர்ச்சனா கல்பாதி!

Tuesday, July 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக், செகண்ட்லுக் போஸ்டர் குறித்த அப்டேட்டை விஜய்யின் பிறந்த நாள் பரிசாக அளித்த இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி சற்றுமுன் தனது டுவிட்டரில் இந்த படத்தின் அடுத்த அப்டேட் குறித்த தகவலை அளித்துள்ளார்.

படப்பிடிப்பு முடிவடைந்த பல திரைப்படங்கள் வியாபாரம் ஆகாமல் பெட்டிக்குள் முடங்கியிருக்கும் நிலையில் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே கிட்டத்தட்ட வியாபாரமும் முடிவடையும் நிலையில் உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் குறித்த தகவலை அளித்த அர்ச்சனா, தற்போது இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனத்தின் பெயரை அறிவித்துள்ளார்.

'பிகில்' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் பெற்றுள்ளதாக அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்,. இந்த அப்டேட் விஜய் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. ஸ்க்ரீன் சீன் நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வசூலை குவித்த நிலையில் பிகில் பட வசூலும் சாதனை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.