close
Choose your channels

விஜய்யின் 'பிகில்' படத்தில் ஷாருக்கான் குத்தாட்டம்?

Tuesday, July 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. இந்த செய்தியை உறுதி செய்வதை போல் சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியை நேரில் காண வந்த ஷாருக்கான், அட்லியின் அலுவலகத்திற்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் 'பிகில்' படத்தில் ஷாருக்கான் நடிப்பதை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை

இந்த நிலையில் தற்போது மீண்டும் பாலிவுட் மீடியாக்களில் 'பிகில்' படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் தோன்றவுள்ளதாகவும், 'பிகில்' படத்தில் இடம்பெற்றுள ஒரு பாடலில் ஷாருக்கான் குத்தாட்டம் ஆடவுள்ளதாகவும் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. ஷாருக்கான் நட்புக்காக பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதேபோல் இந்த படத்திலும் விஜய் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுக்காக சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக இன்றுகூட பாலிவுட் ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளன

ஆனால் இந்த தகவலை படக்குழுவினர் மறுத்துள்ளனர். 'பிகில்' படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக வெளிவந்துள்ள செய்தியில் உண்மையில்லை என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.,
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.