close
Choose your channels

உதயநிதியின் அடுத்த படத்தில் நாயகியாகும் தனுஷ்-சிம்பு நாயகி!

Monday, September 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அரசியல், சினிமா என இரண்டு துறைகளிலும் ஒரே நேரத்தில் ஜொலித்து கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின், மிஷ்கின் இயக்கத்தில் ’சைக்கோ’ என்ற படத்திலும், மாறன் இயக்கத்தில் ‘கண்ணை நம்பாதே’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அருண்விஜய் நடிப்பில் உருவான வெற்றி திரைப்படமான ‘தடம்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ள அடுத்த படத்தில் உதயநிதி நடிக்கவுள்ளார். மகிழ்திருமேனியின் வழக்கமான த்ரில்லர் படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க நடிகை மேகா ஆகாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தேதி முடிவானதும் மேகா ஆகாஷ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என கூறப்படுகிறது. மேகா ஆகாஷ் ஏற்கனவே தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் சிம்பு நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.