close
Choose your channels

'மெர்சல்' 'பிகில்' படத்தில் பணிபுரிந்தவருக்கு திருமணம்: கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நேரில் வாழ்த்து

Sunday, April 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’மெர்சல்’ ‘பிகில்’ படத்தில் பணிபுரிந்தவருக்கு திருமணம்: கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நேரில் வாழ்த்து

தளபதி விஜய் நடித்த ’மெர்சல்’ மற்றும் ‘பிகில்’ உள்பட ஒரு சில திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஜிகே விஷ்ணு அவர்களுக்கு திருமணம் நடைபெற்றதை அடுத்து இந்த திருமணத்தில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ’மெர்சல்’,‘பிகில்’ உள்பட ஒரு சில திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஜிகே விஷ்ணு. இவர் இன்று மஹாலட்சுமி என்ற பெண்ணை திருமணம் கொண்டார். இன்று நடந்த இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு நேரில் வாழ்த்து கூறினார்கள்.

குறிப்பாக நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகை வரலட்சுமி ஆகியோர் நேரில் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.