close
Choose your channels

உபி தேர்தலில் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்த 'மிஸ் பிகினி'  நடிகை!

Friday, March 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மிஸ் பிகினி பட்டம் பெற்ற பிரபல நடிகை ஒருவர் சமீபத்தில் நடந்த உத்தரப் பிரதேச மாநில தேர்தலில் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் பிகினி இந்தியா போட்டியில் பட்டம் வென்றவர் நடிகை அர்ச்சனா கவுதம். இவர் மேலும் ’மிஸ் உத்தரபிரதேசம்’, மிஸ் காஸ்மோ, மிஸ் டேலண்ட்’ ஆகிய பட்டங்களை வென்றுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அர்ச்சனா கவுதம், வெறும் 1519 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார். இவர் போட்டியிட்ட அஸ்தினாபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் தினேஷ் என்பவர் ஒரு லட்சத்து 7 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

மிஸ் பிகினி அர்ச்சனா கவுதம், தமிழில் ’குண்டாஸ்’ மற்றும்’ 47ஏ’ ஆகிய திரைப்படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.