close
Choose your channels

வில்லன் நடிகர் நம்பியாரின் மகள் ஒரு பிரபல நடிகையா? அசத்தல் புகைப்படங்கள்!

Tuesday, December 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் வில்லன் கேரக்டர்களில் நடித்த எம்என் நம்பியார் மகள் ஒரு பிரபல நடிகை என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகின் பழம்பெரும் நடிகர் நம்பியார் என்பதும் அவர் எம்ஜிஆர், சிவாஜி உள்பட ஏழு தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் நம்பியாருக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் அவர்களில் ஒருவர்தான் சினேகா.

இவர் தமிழ், மலையாள தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார் என்பதும், விஜய் நடித்த ’ஆதி’ விஷால் நடித்த ’வெடி’ உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

சினேகாவை சீரியலில் பார்த்த ஒரு பெண் அவரிடமும், அவருடைய பெற்றோரையும் தொடர்பு கொண்டு தனது மகன் ஈஸ்வர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார் என்பது ஆச்சரியமான தகவலாகும். சினேகா - ஈஸ்வர் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல மலையாள டிவி தொடர்களில் நடித்துள்ள சினேகா, ஆசியாநெட் தொலைக்காட்சி சிறப்பு விருதை பெற்றுள்ளார். தமிழ் தொலைக்காட்சிகளிலும் அவர் பல சீரியல்களில் நடித்துள்ளார். தமிழில் ’அகல்யா’ என்ற சீரியலில் மூலம் அறிமுகமான சினேகா அதன்பிறகு ராதிகாவின் ’செல்லமே’ உள்பட பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.