close
Choose your channels

நீ ஒரு காதை அறுத்துகிட்டாலும் அது நடக்கவே நடக்காது.. வாழ்த்து கூறிய நெட்டிசனுக்கு மோகன் ஜி பதிலடி!

Tuesday, January 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகிய ’பகாசூரன்’ என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் வெற்றிகரமாக பிளாப் ஆகி தோல்வி அடைந்து ஊத்திக்க வாழ்த்துக்கள் என நெட்டிசன் கூறிய நிலையில் அந்த ரசிகர்களுக்கு மோகன் ஜி பதிலடி கொடுத்துள்ளார்.

மோகன் ஜி இயக்கத்தில் ,செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பகாசூரன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் தனுஷ் நடித்துள்ள ’வாத்தி’ வெளியாகும் அதே பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘வாத்தி’க்கு போட்டியாக ’பகாசூரனா? எனதனுசு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நெட்டிசன் ஒருவர், ’பகாசூரன்’ வெற்றிகரமாக பிளாப் ஆகி தோல்வி அடைந்து ஊத்திக்க வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ள மோகன் ஜி, ‘நீ உன் குலதெய்வத்தை வேண்டி ஒரு பக்க காதை அறுத்துக்கிட்டாலும் அது நடக்காது, படம் எல்லோருக்கும் பிடிக்கும், வெற்றி படமாக அமையும், ஸ்கிரீன்ஷாட் எடுத்து வச்சுக்கோ’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.