close
Choose your channels

படு ஒல்லியாக மாறிய இசையமைப்பாளர் தமன்… வேறலெவல் டிரான்ஸ்பர்மேஷன் புகைப்படம்!

Wednesday, February 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக அறியப்படும் தமன் சமீப ஆண்டுகளில் 135 கிலோ எடையுடன் வலம்வந்தார். அவர் தற்போது வேறலெவல் டிரான்ஸ்பர்மேஷன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான “ஈரம்” திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் தமன். இவர் ஏற்கனவே ஷங்கர் இயக்கிய “பாய்ஸ்“ திரைப்படத்தில் டிரம்ஸ் கலைஞராக நடித்திருந்தார். பின்னர் தொடர்ந்து பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிவந்த இவர் முதன்முதலான “மல்லி மல்லி“ எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார்.

தொடர்ந்து “அலவைக்குந்த புரமுலோ” எனும் திரைப்படம் படு ஹிட்டான நிலையில் முன்னணி இசையமைப்பாளர் ஆனார். அதையடுத்து தற்போது தளபதி விஜய் நடிக்கவுள்ள தமிழ், தெலுங்கு திரைப்படத்திற்கு இவர்தான் இசையமைக்கப் போகிறார். அதேபோல சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் தமிழ், தெலுங்கு திரைப்படத்திற்கும் இவர்தான் இசையமைக்க இருக்கிறார். மேலும் இவருடைய இசையில் மகேஷ்பாபுவின் “சர்காரு வாரியபாட்டா“, பவன் கல்யாணின் “பீம்லா நாயக்“ திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இப்படி பிசியான இசையமைப்பாளராக வலம்வரும் தமன் சமீபத்தில் தன்னுடைய உடல்எடையை 35 கிலோ அளவிற்கு குறைத்திருக்கிறார். முன்னதாக 135 கிலோவில் இருந்த இவர் தற்போது 101 கிலோ அளவிற்கு குறைந்துள்ள புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். ஏற்கனவே சிம்புவின் வேறலெவல் டிரான்ஸ்பர்மேஷனைப் பார்த்து உற்சாகம் அடைந்திருக்கும் ரசிகர்கள் தற்போது தமனின் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து மேலும் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.