close
Choose your channels

'முத்தின கத்தரிக்கா' திரை முன்னோட்டம்

Tuesday, June 14, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் சுந்தர் சி கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடிப்பதை நிறுத்திவிட்டு படங்களை இயக்குவதில் மட்டும் முழு கவனத்தை செலுத்தி வந்தார். அவர் இயக்கும் படங்களில் மட்டும் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்த அவர் தற்போது மீண்டும் ஹீரோவாக சுந்தர் சி நடித்துள்ள படம் தான் 'முத்தின கத்தரிக்கா'. இந்த படம் வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகவுள்ளது.
மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆகிய 'வெள்ளிமூங்கா' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படம் அரசியல் நையாண்டி மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள படம். இந்த படத்தில் சுந்தர் சி அரசியல்வாதியாக கச்சிதமாக நடித்துள்ளார் என்பது இந்த படத்தின் டிரைலரில் இருந்தே தெரிய வருகிறது.
'அரண்மனை 2' படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்த பூனம்பாஜ்வா இந்த படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். கவர்ச்சி மற்றும் கலக்கலான நடிப்பால் இந்த படத்திலும் அவர் ரசிகர்களின் கவனத்தை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூனம் பாஜ்வாவின் அம்மாவாக 'ஜெமினி' புகழ் கிரண், மற்றும் காமெடிக்கு சதீஷ், விடிவி கணேஷ், சிங்கம்புலி உள்பட பலர் இந்த படத்தில் சப்போர்ட்டிங் கேரக்டர்களாக நடித்துள்ளனர்.
சுந்தர் சியின் உதவியாளர் வெங்கட்ராகவன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். சுந்தர்சி -குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் திரைவிமர்சனத்தை வரும் வெள்ளியன்று பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.