close
Choose your channels

நடிகர் சங்க தேர்தலில் முன்னிலை அணி எது? பரபரப்பு தகவல்!

Sunday, March 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் முன்னிலை பெற்ற அணி எது என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் நீதிமன்ற தடை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக எண்ணாமல் இருந்தது. இதனை அடுத்து சமீபத்தில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மற்றும் கே.பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணி என இரண்டு அணிகள் போட்டியிட்ட நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி பாண்டவர் அணி முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி, கருணாஸ் ஆகியோர் முன்னிலையில் இருப்பதாகவும் இறுதி முடிவு இன்று மாலைக்குள் தெரியும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.