close
Choose your channels

மக்கள் தலைவருக்கு மரியாதை செய்த நடிகர் சங்கம்

Thursday, December 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் திலகம் என்றும் புரட்சி தலைவர் என்றும் தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்படும் தமிழக முன்னாள் முதல்வர் அவர்களின் 28வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.


எம்.ஜி.ஆரின் சிலைகளுக்கு முக்கிய அரசியல்வாதிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை மெரீனாவில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்.

இந்நிலையில் புதியதாக பொறுப்பேற்ற நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று நடிகர் சங்க கட்டிடத்தில் எம்.ஜி.ஆரின் புகைப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து தங்கள் மரியாதையை செலுத்தினர்.

எம்.ஜி.ஆர் நடிகராக இருந்தபோது நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.