close
Choose your channels

நயன்தாராவுடன் ஹனிமூன் எந்த நாட்டில்? விக்னேஷ் சிவன் பகிர்ந்த புகைப்படங்கள்!

Sunday, June 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன், ஹனிமூன் சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 9ஆம் தேதி இவர்களது திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அதன் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிகள் திருப்பதி உள்பட பல கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். அதன்பிறகு நயன்தாராவின் அம்மா வீட்டுக்குச் சென்ற இருவரும் தற்போது ஹனிமூன் என்று இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தாய்லாந்து நாட்டின் வீடியோ, புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவர் நயன்தாராவுடன் தாய்லாந்து நாட்டிற்கு தான் ஹனிமூன் சென்று இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.