close
Choose your channels

ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் நடிப்பது உண்மையா? சிவராஜ்குமார் பேட்டி

Sunday, June 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் நடிப்பது உண்மையா? என கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

இது குறித்து சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சிவராஜ்குமார், ‘இயக்குனர் நெல்சன் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்சன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த படத்தின் கதையை கேட்டு ஆச்சரியமடைந்ததாவும் நிச்சயம் இந்த படம் வெற்றி அடையும் என்றும் அவர் கூறினார்.

ரஜினிகாந்த் அவர்கள் எங்கள் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் என்னுடைய 12 வயது முதலே ரஜினிகாந்த் அவர்களை எனக்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியுடன் நடிக்க யாருக்குத்தான் விருப்பம் இருக்காது என்றும் அவருடன் நடிக்கும் ஒரு அதிர்ஷ்டமான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

சிவராஜ்குமாரின் இந்த பேட்டியை அடுத்து ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் சிவராஜ்குமார் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டதாகவே தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.