ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரபல நடிகை

  • IndiaGlitz, [Wednesday,January 09 2019]

விஷால் நடித்த 'தீராத விளையாட்டு பிள்ளை', 'மாதவன் நடித்த 'யாவரும் நலம்', 'சேரன் நடித்த 'யுத்தம் செய்', 'ஜெயம் ரவி நடித்த 'ஆதி பகவன்' ஆகிய தமிழ் படங்கள் உள்பட ஏராளமான தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்த நடிகை நீதுசந்திரா

தற்போது பட வாய்ப்பு இல்லை என்றாலும் சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களுக்கு புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குக்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வருகிறார்.

புகையில்லா உலகை ஏறபடுத்துவதும், புகையிலையினால் அதை பயன்படுத்துபவர்கள் மட்டுமின்றி அவர்களுடைய குடும்பமும் பாதிக்கப்படுவது குறித்து ஆட்டோ, டாக்ஸி, ரிக்சா டிரைவர்களிடம் இவர் நேரடியாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார். இதுகுறித்த புகைப்படம் ஒன்றையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

More News

தல அஜித்துடன் இணைந்த இயக்குனர் சேரன்

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இன்னும் ஒருசில மணி நேரங்களே இருக்கும் நிலையில் ஒன்றரை வருடங்கள் கழித்து அஜித் ரசிகர்களுக்கு தல தரிசனம் திரையில் கிடைக்கவுள்ளது.

நேர்மை இருக்குற இடத்தில கோபம் இருக்கும்: கண்ணே கலைமானே டிரைலர் விமர்சனம்

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்த 'கண்ணே கலைமானே திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதி வெளியிட்ட இந்த டிரைலர் குறித்து தற்போது பார்ப்போம்

'இந்தியன் 2' படத்தில் சிம்புவின் கேரக்டர்

கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் சில ஆச்சரியமான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றது.

விஜய்சேதுபதியை கடவுளாக பார்க்கின்றேன்: பிரபல இசையமைப்பாளர்

ஒவ்வொரு ஆண்டும் கோலிவுட் திரையுலகில் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. கடந்த ஆண்டு இவரது நடிப்பில்

சாய்பல்லவியின் தாராள மனதால் தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

கடந்த மாதம் 21ஆம் தேதி தனுஷூடன் சாய்பல்லவி நடித்த 'மாரி 2' திரைப்படம் ரசிகர்கள் அளவிலும், வசூல் அளவிலும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.