close
Choose your channels

நேர்மை இருக்குற இடத்தில கோபம் இருக்கும்: கண்ணே கலைமானே டிரைலர் விமர்சனம்

Wednesday, January 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்த 'கண்ணே கலைமானே திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதி வெளியிட்ட இந்த டிரைலர் குறித்து தற்போது பார்ப்போம்

சீனுராமசாமி படம் என்றாலே பச்சை பசேலென வயல்வெளிகள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். அது இந்த படத்திலும் தொடர்கிறது. முதல்முறையாக உதயநிதியை வேட்டி கட்டி ஏர் பூட்டி உழவு செய்ய வைத்துள்ளார். கிராமத்து திருவிழா, சாமியாட்டம், சண்டை சச்சரவுகளின் காட்சிகள் மிக இயல்பாக உள்ளது.

உதயநிதி ஒரு கிராமத்துக்காரராகவே மாறியுள்ளார். ஆக்சன், ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பில் மெருகு தெரிகிறது. தமன்னா வழக்கம்போல் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறிவிடுவாரே, அதேபோல் இந்த படத்திலும் வங்கி அதிகாரியாகவே மாறி நடித்துள்ளார்.

வடிவுக்கரசி, வசந்தரா ஆகியோர்களின் கேரக்டர்கள் கதையுடன் ஒன்றி வருவார்கள் போல் தெரிகிறது.

கிராமத்து கதைக்கு பொருத்தமான யுவனின் இசையும், ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவும் உள்ளது. மொத்தத்தில் ஒரு அழுத்தமான கதையுடன் கூடிய கிராமிய படம் ஒன்று ரசிகர்களுக்கு விருந்தாக காத்திருக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.