close
Choose your channels

ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரபல நடிகை

Wednesday, January 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்த 'தீராத விளையாட்டு பிள்ளை', 'மாதவன் நடித்த 'யாவரும் நலம்', 'சேரன் நடித்த 'யுத்தம் செய்', 'ஜெயம் ரவி நடித்த 'ஆதி பகவன்' ஆகிய தமிழ் படங்கள் உள்பட ஏராளமான தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்த நடிகை நீதுசந்திரா

தற்போது பட வாய்ப்பு இல்லை என்றாலும் சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களுக்கு புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குக்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வருகிறார்.

புகையில்லா உலகை ஏறபடுத்துவதும், புகையிலையினால் அதை பயன்படுத்துபவர்கள் மட்டுமின்றி அவர்களுடைய குடும்பமும் பாதிக்கப்படுவது குறித்து ஆட்டோ, டாக்ஸி, ரிக்சா டிரைவர்களிடம் இவர் நேரடியாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார். இதுகுறித்த புகைப்படம் ஒன்றையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.