close
Choose your channels

விஜயகாந்த் இயக்குனரின் அடுத்த படத்தில் ஹீரோவாகும் கோபிநாத்

Monday, October 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘நீயா நானா’ என்ற நிகழ்ச்சியை பல வருடங்களாக நடத்தி வரும் கோபிநாத், ஏற்கனவே ‘நிமிர்ந்து நில்’ உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனையடுத்து சிவகார்த்திகேயன், சந்தானம், ரியோ ராஜ், ஆர்ஜே பாலாஜியை அடுத்து தொலைக்காட்சியில் இருந்து இன்னொரு ஹீரோ கோலிவுட் திரையுலகிற்கு கிடைத்துள்ளார்.

கடந்த 1999ஆம் ஆண்டு விஜயகாந்த், சிம்ரன் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பாரதி கணேஷ் இயக்கும் இந்த படத்திற்கு ‘இது எல்லாத்துக்கும் மேல’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கோபிநாத் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் ஏராளமான குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும், இந்த படத்தின் கதைக்கு கோபிநாத் பொருத்தமாக இருப்பார் என கருதியதால் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் இயக்குனர் பாரதி கணேஷ் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.