close
Choose your channels

'மாநாடு 2' படத்தின் ஹீரோ இவரா? ரசிகர்களின் வேற லெவல் கமெண்ட்!

Wednesday, December 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றி படக்குழுவினர் அனைவருக்கும் புத்துணர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’மாநாடு’ படத்தின் வெற்றியை அடுத்து ‘மாநாடு 2’ படத்தையும் வெங்கட் பிரபு இயக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பதும் வெங்கட்பிரபுவும் கண்டிப்பாக ‘மாநாடு 2’வரும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ’மாநாடு’ படத்தை புரமோஷன் செய்யும் வகையில் இந்த படத்தில் சிம்புவின் நண்பராக நடித்திருந்த பிரேம்ஜி அவ்வப்போது வித்தியாசமான வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் ’விமானத்தில் பயணம் செய்யும் போது திடீரென சிம்பு ’மாநாடு’ படத்தில் கண்விழிப்பது போல விழித்து நடித்துள்ளார். அதை அருகில் உட்கார்ந்திருக்கும் வெங்கட்பிரபு ஆச்சரியத்துடன் பார்ப்பது போன்ற காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன

இதனை அடுத்து இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் வேற லெவல் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். ’மாநாடு 2’ படத்தின் ஹீரோ பிரேம்ஜியா? என்று ஒருவரும், நீங்கள் எப்பொழுதும் மாளவிகா மோகனன் இன்ஸ்டா பக்கத்தில் தான் இருப்பீர்கள், இங்கே உங்களுக்கு என்ன வேலை? என்று இன்னொருவரும், ‘வயசாயிடுச்சு தல’ என்று மற்றொருவரும் வேற லெவல் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.