close
Choose your channels

லேட்டஸ்ட் அவுட் ஃபிட்டில் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிதி அகர்வால்!

Thursday, October 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நிதி அகர்வால். இவர் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான “பூமி’‘ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். மேலும் நடிகர் சிம்புடன் இணைந்து “ஈஸ்வரன்“ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது தெலுங்கில் முன்னணி நடிகரான பவன்கல்யாணுடன் இணைந்து “ஹரி ஹர வீரமல்லு“ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத்தவிர சோஷியல் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை நிதி அகர்வால் அவ்வபோது தனது போட்டோஷுட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது ரசிகர்களை இன்பக்கடலில் ஆழ்த்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது லைட் பிங்க் நிறத்தில் உடையணிந்த நடிகை நிதி அகர்வால் தன்னுடைய காந்தக் கண்களைக் காட்டும் வகையில் அழகிய புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.