close
Choose your channels

'தளபதி 62' படக்குழுவினர்களுக்கு போடப்பட்ட திடீர் நிபந்தனை

Tuesday, February 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் 'மெர்சல்' படத்தில் தன்னுடைய தோற்றத்தை வித்தியாசமாக காட்ட உதவிய சிகையலங்கார நிபுணர் தேவ், 'தளபதி 62' படத்திலும் விஜய்யின் ஹேர்ஸ்டைலை வித்தியாசமான ஸ்டைலில் வடிவமைக்கவுள்ளார். குறிப்பாக பாடல் காட்சியில் இதுவரை இல்லாத வகையில் விஜய்யின் ஹேர்ஸ்டைல் இருக்கும் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஸ்டில்கள் மற்றும் சண்டைக்காட்சியின்  வீடியோ ஆகியவை இண்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது படக்குழுவினர்களை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. இதனையடுத்து படக்குழுவினர்கள் யாரும் படப்பிடிப்புக்கு செல்போன் கொண்டு வரக்கூடாது என்ற நிபந்தனையை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நிபந்தனையால் படக்குழுவினர் அப்செட் ஆனபோதிலும் இனிமேல் இந்த படத்தின் ஸ்டில்கள் , வீடியோக்கள் லீக் ஆக வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.