close
Choose your channels

பா ரஞ்சித் பிறந்த நாளில் வெளியான 'தங்கலான்' மாஸ் போஸ்டர்

Thursday, December 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தில் பசுபதி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இயக்குனர் பா ரஞ்சித்தின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் பா ரஞ்சித்தின் பிறந்த நாளை முன்னிட்டு சற்றுமுன் ‘தங்கலான்’ படத்தின் மாஸ் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் வெளியாகி உள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் விக்ரம் மற்றும் பா ரஞ்சித் ஆகியோர் அட்டகாசமான போஸில் நிற்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கோலார் தங்க வயலை பின்னணியாகக் கொண்ட கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.