close
Choose your channels

பா.ரஞ்சித்தின் 'சார்பாட்டா' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thursday, July 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான பிரம்மாண்டமான திரைப்படம் ‘சார்பாட்டா’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் டப்பிங் பணிகள் மற்றும் சவுண்ட் மிக்ஸிங் பணிகள் முடிவடைந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையரங்குகள் கடந்த சில மாதங்களாக திறக்கப்படாததால் இந்த படம் ஓடிடியில் ரிலீசாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ஓடிடியில் ‘சார்பாட்டா’ திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 22ஆம் தேதி ‘சார்பாட்டா’ படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆர்யா மற்றும் ரஞ்சித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குத்து சண்டை வீரராக ஆர்யா நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக துஷாரா நடித்துள்ளார். கலையரசன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். முரளி ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.