close
Choose your channels

பா ரஞ்சித் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்: புதிய தேதி அறிவிப்பு!

Wednesday, March 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவான ’குதிரைவால்’ என்ற திரைப்படம் மார்ச் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக சற்று முன் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தனது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’குதிரைவால்’. இந்த படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 4ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மார்ச் 18ஆம் தேதி வெளியாக இருப்பதாக பா ரஞ்சித் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மனோஜ் லியோன் ஜாசன் மற்றும் சியாம் சுந்தர் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் கலையரசன் மற்றும் அஞ்சலி பட்டேல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையில், கிரிதரன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.