close
Choose your channels

பா ரஞ்சித்தின் சூப்பர்ஹிட் படம்.. 2ஆம் பாகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Monday, March 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் படம் ஒன்றின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு அமேசான் ஓடிடியில் நேரடியாக வெளியானது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததன் காரணமாக வேறு வழியின்றி இந்த படம் அமேசான் ஓடிடியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் ஊடகங்கள் அனைத்தும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’சார்பட்டா பரம்பரை’ படத்தின் மிகப்பெரிய வெற்றி காரணமாக இந்த படத்தின் இரண்டாம் பாக அறிவிப்பை சற்றுமுன் நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேட்ச் பார்க்க ரெடியா? ரோஷமான ஆங்கில குத்து சண்டை.. ரவுண்டு 2 என்று அவர் பதிவு செய்துள்ளார் மேலும் ’சார்பாட்டா 2’ விரைவில் என்றும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.