close
Choose your channels

ஹேப்பி பர்த்டே கங்கம்மா.. 'தங்கலான்' நடிகைக்கு வாழ்த்து சொன்ன பா ரஞ்சித்.. புதிய போஸ்டர்..!

Sunday, April 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’தங்கலான்’ படத்தில் நடித்த நடிகை இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய கேரக்டர் போஸ்டரை வெளியிட்டு இயக்குனர் ரஞ்சித் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான ’தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவுக்கு வந்து விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் தேர்தல் முடிந்தவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் அதன் பிறகு இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த படத்தில் விக்ரமுடன் மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி உட்பட பலர் நடித்துள்ள நிலையில் இதில் பார்வதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை அடுத்து இயக்குனர் பா ரஞ்சித், பார்வதி நடித்த கங்கம்மா என்ற கேரக்டர் போஸ்டரை வெளியிட்டு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இந்த போஸ்டரில் பார்வதியின் கெட்டப் லுக் அட்டகாசமாக இருப்பதை எழுது அவருக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை பார்வதி ’தங்கலான்’ மட்டுமின்றி இரண்டு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்களும் இந்த ஆண்டே வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.