close
Choose your channels

யூடியூப் பிரபலம் 'பரிதாபங்கள்' சுதாகருக்கு திருமணம்: குவியும் வாழ்த்துக்கள்

Sunday, March 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘பரிதாபங்கள்’ என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்த சுதாகர் மற்றும் கோபி ஆகிய இருவருக்கும் சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ‘பரிதாபங்கள்’ சுதாகருக்கு இன்று திருமணம் ஆகி உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

‘பரிதாபங்கள்’ என்ற யூடியூப் சேனலில் மட்டுமின்றி ’மீசையமுறுக்கு' உள்பட ஒரு சில படங்களிலும் நடித்துள்ள கோபி மற்றும் சுதாகர் வெளியிடும் வீடியோக்கள் ஒவ்வொன்றும் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெறும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சுதாகரின் சொந்த ஊரான சிவகாசியை சேர்ந்த பெண்ணுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயம் ஆன நிலையில் இன்று நிச்சயிக்கபட்ட பெண்ணுடன் சுதாகர் திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணத்தில் ‘பரிதாபங்கள்’ கோபி உள்பட அவரது குழுவினர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும் இது குறித்த புகைப்படங்களும் வைரல் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பரிதாபங்கள் கோபிக்கும் விரைவில் திருமணமாகும் என்று அது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.